வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Mayuri Jan 03, 2024 05:48 AM GMT
Report

வரி அறவீடுகள் உள்ளிட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் யாராலும் விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்ற போதும் இம்மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல பிரஜைகளும் தமக்குரிய வரியை சரியாகச் செலுத்துவதுடன், தாம் அறிந்த எவரேனும் வரி செலுத்தாதிருந்தால் அதுகுறித்து தகவல் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுமதிசேர் வரி (வற்வரி) விதிப்பு உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும், நாம் பயணிக்க வேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் தொடர்பில் வெளியான தகவல்

வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு | Vat Tax Rate In Sri Lanka

பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடந்த 2022ஆம் ஆண்டு முன்னொருபோதும் இல்லாத வகையிலான மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. குறிப்பாக பொருளாதாரம் 8 சதவீதத்தினால் சுருக்கமடைந்ததுடன் பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது. வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு வீழ்ச்சியடைந்ததுடன் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்விளைவாக பணவீக்கம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டுக் கையிருப்பு மட்டம் உயர்வடைந்தமை உள்ளிட்ட பிரதிபலன்களை அடைந்து கொள்ள முடிந்ததுடன் பொருளாதாரம் மீண்டும் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றைத் தொடர்ந்து சீராக முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இவ்வாண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும்.

மக்களிடம் சுகாதார அமைச்சர் விசேட வேண்டுகோள்

மக்களிடம் சுகாதார அமைச்சர் விசேட வேண்டுகோள்

வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு | Vat Tax Rate In Sri Lanka

குறிப்பாக 2024இல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கும், பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தில் பேணுவதற்கும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக இருப்பதனால், அதுகுறித்து யாராலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க முடியும்.

ஆனால் நாம் முன்னெடுத்திருக்கும் மறுசீரமைப்புக்களையும், கடினமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி பொதுமக்கள் சிந்திப்பதில்லை. உண்மையில் நாம் உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தியிருக்காவிடின் லெபனான், ஆர்ஜென்டீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையைத்தான் அடைந்திருப்போம்.

இவ்வாறான மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேயொரு நாடு இலங்கை தான். அடுத்ததாக நாம் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுக்கான கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தினோமே தவிர, நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக அறிவிக்கவில்லை.

சந்திரசேன எம்.பி மற்றும் ரஞ்சித் சமரகோனிற்கு எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்

சந்திரசேன எம்.பி மற்றும் ரஞ்சித் சமரகோனிற்கு எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்

வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு | Vat Tax Rate In Sri Lanka

கடன்மீள்செலுத்துகை

வங்குரோத்துநிலை என்பது கடன்களை மீண்டும் எப்போதும் செலுத்தப்போவதில்லை எனும் நிலையாகும். அவ்வாறான சூழ்நிலையில் யாரும் எமக்கு கடன்வழங்க முன்வரமாட்டார்கள். ஆனால் நாம் கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் மூலம் கடன்மறுசீரமைப்பின் ஊடாக கடன்களை மீளச்செலுத்துவதற்குரிய காலப்பகுதியை நீடிக்குமாறு கோரினோம்.

கடன் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இன்னும் சொற்பளவிலான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சகல மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அனைவருக்கும் இடையே சமனாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும்.

குறிப்பாக நாட்டின் சகல பிரஜைகளும் தமக்குரிய வரியை சரியாகச் செலுத்துவதுடன், தாம் அறிந்த எவரேனும் வரி செலுத்தாதிருந்தால் அதுகுறித்து தகவல் வழங்கவேண்டும். நாம் கீழ்நோக்கி இலகுவாகப் பயணிக்கலாம். ஆனால் அதிலிருந்து மீண்டும் மேல்நோக்கிப் பயணிப்பதென்பது கடினமானதாகும்.

இலங்கையில் விநியோகிக்கப்பட்ட தரமற்ற மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் விநியோகிக்கப்பட்ட தரமற்ற மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு | Vat Tax Rate In Sri Lanka

அதனைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். இப்போது நாம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் சிறிய மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணத்தின் திசையை மாற்றினால் மீண்டும் மிகமோசமான நெருக்கடிக்குள் விழுந்துவிடுவோம் என்பதை மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US