இலங்கைக்கு இருண்ட நாளாகும்! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான நாடுகளின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இருண்ட நாள்
மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்களின் தடுப்புக் காவலில் கையெழுத்திட வேண்டாம் என
ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட
நாளாகும் என்று மேரி லோலர் ட்வீட் செய்துள்ளார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri