வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 16 உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மூன்று பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர், ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க ஆகியோர் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தடுப்பு காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
சட்டவிரோத ஒன்றுக்கூடல்
கொழும்பில் நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது 19 பேரை பொலிஸார் கைது செய்தனர். சட்டவிரோத ஒன்றுக்கூடல் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கறுவாத்தோட்டம், கொம்பனித்தெரு, பொரல்லை மற்றும் களனி பொலிஸ் நிலையங்களின் குற்ற விசாரணைப் பிரிவினர் இவர்களை கைது செய்தனர்.
இவர்களில் 16 பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இலங்கை திரும்பும் கோட்டாபயவுக்கு எதிராக பல வழக்குகள் |