விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி

Sri Lanka NPP Government
By Thileepan Aug 03, 2026 08:14 AM GMT
Report

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(02.08.2026) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் வவுனியா ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள நீரில் மூழ்கிய ஹட்டன் - டிக்கோயா தோட்டம்

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள நீரில் மூழ்கிய ஹட்டன் - டிக்கோயா தோட்டம்

ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பில் எமக்கு தெரியும்.

ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். ஏனைய ஊடக நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி | Various Schemes Journalists To Implemented Soon

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்.

கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம்

இதனை ஒரு வருடத்திற்கு மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.

கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி | Various Schemes Journalists To Implemented Soon

எமது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோவொரு வகையில் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

20 வருடங்களுக்கு மேலாக நிகழும் படுகொலை

அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது.

நாம் பல வழக்குகளை தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம். தேங்கியுள்ள வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை முன்வைத்துள்ளோம்.

கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. அவற்றை திரட்ட வேண்டியுள்ளது. அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன் மூலமே நீதியைப் பெற முடியும்.

சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள்.

அந்த வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள். வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளார்கள்.

விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி | Various Schemes Journalists To Implemented Soon

எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

மஹர சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்திய பின்னணியில் 4 கைதிகள் - ஆய்விற்காக களமிறங்கும் முக்கிய அதிகாரிகள்

மஹர சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்திய பின்னணியில் 4 கைதிகள் - ஆய்விற்காக களமிறங்கும் முக்கிய அதிகாரிகள்


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US