தேசிய மட்டத்தில் ஐந்து போட்டிகளில் மு/வற்றாப்பளை ம.வி.முதலிடம்(Photos)
தேசியமட்ட கர்நாடக சங்கீத மற்றும் நடனப் போட்டிகளில்,ஐந்து போட்டி நிகழ்ச்சிகளில் மு/வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அந்த பாடசாலையின் சங்கீத பாட ஆசிரியையாக கடமையாற்றும் சாந்தகுமாரி கமலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டிகள் 18.11.2023 அன்று அனுராதபுரத்தில் சுவர்ண பாலிகா மகளிர் பாடசாலையில் நடைபெற்றன.
ஐந்து போட்டிகளில் முதலிடம்
புலியாட்டம் , தப்பாட்டம், குழு இசை, இசைநாடகப்பாடல், தனி இசை ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
புலியாட்டம் மற்றும் தப்பாட்டம் என்பன நடன பாடம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகள் ஆகும்.இந்த நிகழ்ச்சிகளை பயிற்றுவிப்பதில் பாடசாலையின் நடன ஆசிரியையான ஜெஸ்மினி சிவகுமாரன் ஈடுபட்டுள்ளார்.
குழு இசை,இசைநாடகப்பாடல்,தனி இசை என்பன கர்நாடக சங்கீத பாடம் சார்ந்தவை சாந்தகுமாரி கமலநாதன் தெரிவித்துள்ளார்.
சாதனையாளர்களுக்கு பாராட்டு
தங்கள் வழிகாட்டல்களை சிரத்தையுடன் பின்பற்றி கற்றுத் தேறிய மாணவிகளால் வெற்றியை எட்டிப் பிடிக்க முடிந்தது எனவும் கடந்த வருடம் இரண்டு போட்டிகளில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்ததாகவும் அதன்போது பாடசாலைச் சமூகம் மற்றும் முல்லைத்தீவு கல்விவலயத்தின் ஊக்குவிப்பும் அதனால் மாணவர்களிடத்தில் ஏற்பட்டிருந்த போட்டிபோடும் மன ஆர்வமும் வெற்றிகளை இலகுவாக்கிவிட்டிருக்கின்றன என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சாதனையாளர்களான பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர், அணி இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.





மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
