யாழில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர் பார்த்தீபன் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் வேட்பாளரான வரதராஜன் பார்த்தீபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்கள் சமூகமளிக்க முடியாது என்ற விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இன்று தேர்தல் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் யாழில் தீவிர பிரசார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், யாழ். வடமராட்சி, நெல்லியடியில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தேர்தல் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
