அறுகம்பை விவகாரம்! உடனடி நடவடிக்கை தொடர்பில் அரசாங்கத்திற்கு ரணில் தரப்பின் அறிவுரை
அரசாங்கம் உடனடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாத குழுக்களிடம் இருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் வேளையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவ்வாறான நிலைமை ஏற்படாததை தற்போதைய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.

எங்கள் அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கியிருந்தது, இதன் மூலம் முக்கியமான தகவல்களை பரிமாறிக்கொண்ட நாங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தோம்.
இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இலங்கை பாரிய அச்சுறுத்தல் எதனையும் எதிர்கொள்ளவில்லை. அச்சுறுத்தல்கள் குறித்து எங்களிற்கு தகவல்கள் கிடைத்தன நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தோம்.

தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. நாட்டின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது பொருளாதாரத்திற்கு பாதிப்பைஏற்படுத்தும் அந்நிய செலாவணி பிரச்சினையை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan