விசாரணையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டும் விடயம்
எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமலாக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செம்மணி உள்ளடங்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் மனித எலும்புக்கூடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒரு ஒருபோதும் மறந்து விட முடியாது. இன்று வடக்கு, கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளிவருகிறது.
வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் காணப்படுகின்றது. முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது மன்னாரிலே. அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாயை தனது பிள்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு தொகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றில் தண்டனை வழங்கும் நிலைப்பாடு
இந்த மனித எலும்புக்கூடுகளை பார்க்கின்ற போது வேதனையை ஏற்படுத்துகிறது. மனித உரிமை மீறல் சம்பந்தமாக செயல்பட்டவர்களை தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறிய, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையானது ஐ.நா.சபை வரை சென்றுள்ளது. இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது.
கையெழுத்து வேட்டை
அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் கூறிய வார்த்தை “கள்ளர்கள் கள்ளர்களை விசாரணை செய்ய முடியாது” என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரணையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.
இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும். எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri