வற் வரியை குறைக்க முடியாது என்கிறது அரச தரப்பு
வற் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கான சம்பளம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுக்கள் அவ்வாறு செய்யாமல் பொருத்தமான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணம் அத்தியாவசிய கொடுப்பனவுகள் மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் கண்ணீர்ப்புகை
இந்நிலையில், தற்போதைக்கு அதிகாரத்தில் இருக்கும் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்தை மக்களின் வாக்குப் பலத்துடன் விரட்டியடிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.
கொழும்பில் இன்று (30.1.2024) ஐக்கிய மக்கள் சக்தியினரால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதை அடுத்து, கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரச பயங்கரவாதத்தாலும் அரச அச்சுறுத்தல்களாலும் மக்களை அடக்கி ஒடுக்கி வருவதாக பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |