கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்களால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(30.01.2024) கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல சுகாதார தொழிற்சங்கங்கள் 35,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து கொடுப்பனவு
மேலும், தமக்கான வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பில் உரிய பதில் கிடைக்காவிடின் 72
சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும்
போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan