இலங்கை வரும் வைரமுத்து: யாழில் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ள முழுநீள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கை வரவுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
தனது நண்பரான பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாக அவர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிலக்கியங்கள்
அத்துடன், நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச் சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று
— வைரமுத்து (@Vairamuthu) October 26, 2025
யாழ்ப்பாணம் செல்கிறேன்
என் நண்பர்
பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும்
மில்லர் படத்தின் படப்பிடிப்பைத்
தொடங்கி வைக்கிறேன்
நல்லிலக்கியங்களும்
நவகலைகளும்
ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான்
பூத்துவர முடியும்
மனதின் வலியும்
மார்பின் தழும்பும்
கலையின் கச்சாப்
பொருள்களாகும்
ஈழத்தில்…
மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா, இன்று மாலை 6 மணியளவில் யாழ். வலம்புரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri