ஜெனீவாவில் பெருந்தொட்ட தொழிலாளர்களது உரிமைகள் தொடர்பில் கருத்துரைத்த வடிவேல் சுரேஷ்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 112 வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பெருந்தொட்ட தொழிலாளர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) கருத்துரைத்துள்ளார்.
குறித்த கூட்டமானது ஜெனீவா (Geneva)நேரத்தில் நேற்று (05.06.2024) மாலை 8 மணிக்கு நடைபெற்றதோடு இக்கூட்டத்தில் 168 நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய ரீதியில் இருக்கின்ற அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் உரிமைகள்
இதில், உரையாற்றிய வடிவேல் சுரேஷ் “இலங்கையில் மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலும் தொழிற்சங்கம் என்ற ரீதியிலும் பல வேலை திட்டங்கள் மேற்கொண்டு வந்துள்ளோம்.
இருப்பினும், இந்திய வம்சாவளி மலையக மக்களின் தொழில் பாதுகாப்பு தொழில் உரிமைகள் இன்றியமையதாக காணப்படுகின்றது
@tamilwinnews ஜெனீவாவில் பெருந்தொட்ட தொழிலாளர்களது உரிமைகள் தொடர்பில் கருத்துரைத்த வடிவேல் சுரேஷ் #Geneva #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Swiss #internationallabourorganisation ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
அதனை கருத்தில் கொண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்ற ரீதியில் முழுமையான பங்களிப்பையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நான் இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |