பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்: வெளியான தகவல்
பாரதிய ஜனதா கட்சியின்(Bharatiya Janata Party) புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம்
பாஜக கட்சியின் சட்ட விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |