ஹமாஸ் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 30இற்கும் மேற்பட்டோர் பலி
மத்திய காசாவில் (Gaza) உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த தாக்குதலை இஸ்ரேல் இன்று (05.06.2024) அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா (UN) பாடசாலை மீது மேற்கொண்டுள்ளது.
நுசெய்ரட் (Nuseirat) அகதிமுகாமில் உள்ள குறித்த பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீதே இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம்
இதன்போது, பலர் காயமடைந்துள்ளதுடன் 27இற்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸின் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியை குறி வைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அந்த பகுதியில் ஹமாஸின் (Hamas) இராணுவ முகாம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுவதை ஹமாஸ் மறுத்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய படையினர் இடம்பெயர்ந்த மக்களிற்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற போரை நியாயப்படுத்த கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam