கோவிட் மரணங்களை குறைப்பதற்கான வழிமுறை! அனுருத்த பாதெனிய
இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியை வழங்கினால், நாட்டில் தினமும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை 90 வீதமாக குறைக்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்கினால், தற்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை 90 வீதமாக குறைக்க முடியும் தற்போது 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
சரியான விதத்தில் தடுப்பூசியை வழங்கினால், இந்த எண்ணிக்கையை நான்கு வார காலத்திற்குள் 10 ஆக குறைக்க முடியும்.
பொருளாதாரத்தில் முக்கிய பிரிவினருக்கு வழங்கும் போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
இதன் பின்னர் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து இலங்கையில் மூன்று லட்சமாக உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை வங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இதன் மூலம் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை திறக்க முடியும் எனவும் பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam