காணாமல் போனோர் அலுவலகத்தில் பதவி வெற்றிடங்கள் : விண்ணப்பிக்குமாறு கோரிக்கை
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள், நாடாளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் உள்ள தகவல் தாளின் படி விண்ணப்பத்தை தயார் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி
குறித்த விண்ணப்பமானது OMPக்கு உறுப்பினர்களின் நியமனம் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே மாதம் 27 ஆம் திகதி அல்லது அதற்கு முன் அரசியலமைப்பு சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்பு சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ, அல்லது constitutionalcouncil@parliament என்ற மின்னஞ்சல் முகவரிக்குவோ அனுப்பப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
“OMP க்கு உறுப்பினர்களின்” நியமனமென்று கடித உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாக குறிப்பிடப்பட வேண்டும்" என்றும் விண்ணப்பத்தார்கள் கோரப்பட்டுள்ளனர்.
இணைப்பு: https://www.parliament.lk/en/secretariat/advertisements/view/305
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |