வெனிசுலா மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல்.. ட்ரம்ப் பெருமிதம்
புதிய இணைப்பு
தேவைப்பட்டால் வெனிசுலா மீது இரண்டாவது 'மிகப் பெரிய' தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க படையினரின் இந்த சாமர்த்திய நகர்வு குறித்து ட்ரம்ப் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், மிக சக்திவாய்ந்த படைகளை கொண்ட ஒரே நாடு அமெரிக்கா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பாதுகாப்பான மற்றும் நியாயமான மாற்றம் வரும் வரை, வெனிசுலாவை அமெரிக்கா ஆட்சி செய்யும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரின் கைது செய்யப்பட்டதையடுத்து ட்ரம்ப் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ட்ரம்பிடம் வெனிசுலாவை அமெரிக்கா நடத்துவது என்றால் அமெரிக்க துருப்புக்கள் களத்தில் இறங்குமா என்று அவரிடம் வினவப்பட்டது.
ட்ரம்பிற்கு கீழ்..
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "தரையில் களத்தில் இறங்குவதை பற்றி நாங்கள் பயப்படவில்லை. அமெரிக்க இராணுவம் நேற்று இரவு மிக உயர்ந்த மட்டத்தில் கறத்தில் இறங்கியது.
President Trump Holds a Press Conference, Jan. 3, 2026 https://t.co/5ykCqSNuNa
— The White House (@WhiteHouse) January 3, 2026
நாங்கள் அந்த நாடு சரியாக நடத்தப்படுவதை உறுதி செய்யப் போகிறோம், நாங்கள் இப்போது மக்களை நியமிக்கிறோம். அந்த மக்கள் யார் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வெனிசுலாவை யார் ஆள போகின்றார்கள் என வினவிய போது, அவர் தன்னையும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவையும் நோக்கி தனது கையை சைகை காட்டியமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan