வெனிசுலா தாக்குதல் விவகாரம்! பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் காணொளி
வெனிசுலா மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரின் மனைவியையும் கைது செய்துள்ளது.
இந்த விடயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய காணொளியொன்று பரபரப்பாகியுள்ளது.
கடுமையான தாக்குதல்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா நிக்கோலஸ் ஜனாதிபதி மதுரோ உடந்தையாக இருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்றையதினம்(3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் பல இடங்களில் தாக்குதல் மேற்கொண்டனர்.
கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இதன்பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பல நாடுகள் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
பேசுபொருளாகியுள்ள காணொளி
இந்நிலையில் வெனிசுலா எண்ணெய் வளங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பேசிய காணொளி பேசுபொருளாகி வருகின்றது.
அந்த காணொளியில் , " வெனிசுலா ஒரு அழகான நாடு. அது மிகவும் வளமான நாடு. ஆனால், இப்போது அது ஒரு தவறான நபரால் (நிக்கோலஸ் மதுரோவால்) ஆளப்படுகிறது.
🇺🇸🇻🇪Trump speaking about #Venezuela on December 18th, 2025:
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) January 3, 2026
“They took our oil rights. We had a lot of oil there. They threw our companies out. And we want it back.” pic.twitter.com/t0ybh3Os04
அவர் அந்த நாட்டைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் எங்கள்(அமெரிக்க நிறுவனங்களின்) எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது.
அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள். நாம் அங்கே எதையும் விட்டு வந்திருக்கக் கூடாது, அந்த எண்ணெயை நாமே எடுத்திருக்க வேண்டும்.
நாங்கள் அவற்றை இப்போது திரும்பப் பெற விரும்புகிறோம். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்." என்று கூறியுள்ளார்.