ரமழானிற்கு பின்னர் போராட்டம் வெடிக்கும்! ரிசாட் எச்சரிக்கை
மன்னார்- புத்தளம் வீதியை திறந்து தராது விட்டால் ரமழானிற்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(19.2.2026) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்றத்திலே பொய்களைக் கூறி ஏமாற்றி விடாமல் பாதையை திறந்து தருமாறும் இல்லாவிடில் மாற்று பாதையை கடல்வழியாக திறந்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரிலே தமிழர்களும், முஸ்லிம்களும் வாழுவதால் எல்லோருடைய கண்ணும் குருடாக இருக்கின்றது.போக்குவரத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொய்யான குறறச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உடனடியாக குறித்த பாதையை திறந்து தருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam