மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார்
கொழும்பின் புறநகர் பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
கொஸ்கம பகுதியிலுள் வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாததத்தில் மாமனார் தனது மருமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்வத்த வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய துஷான் ரங்கன மாயாதுன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த, குறித்த நபர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan