கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ

Donald Trump United States of America Venezuela
By Sajithra Jan 04, 2026 02:08 AM GMT
Report

புதிய இணைப்பு

மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவின் பெருநகர தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் இராணுவ வாகனங்கள், DEA தலைமையகத்திலிருந்து வெளியேறி மன்ஹாட்டனின் வெஸ்ட்சைடு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் சென்று உலங்குவானூர்திக்கு திரும்பியுள்ளன. 

பின்னர் வெனிசுலா ஜனாதிபதிய மதுரோவும் அவரது மனைவியும் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதியுயர் பாதுகாப்புடன் மூன்று உலங்குவானூர்திகள் ஹட்சன் ஆற்றின் வழியாக பயணித்து, நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் கடந்து சென்றுள்ளன.

அதனை தொடர்ந்து அவர்கள் தற்போது தரையிறங்கி, அமெரிக்க போதைப்பொருள் சட்ட நடைமுறை திணைக்களத்தின் வாகனங்களின் வரிசையில் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள குறிப்பிட்டுள்ளன. 

கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ | Donald Trump Shared Image Of Nicolas Maduro

மூன்றாம் இணைப்பு 

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் விமானம் நியூயோர்க்கில் தரையிறங்கியது.

ட்ரம்பின் மகனான பெரோன் வில்லியம் ட்ரம்ப், பகிர்ந்துள்ள காணொளி பதிவில், "மதுரோவை ஏற்றிச் சென்ற விமானம் இப்போது நியூயார்க்கின் ஸ்டீவர்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அவருக்கு சிறையில் ஆயுள் தண்டனை. கொடுங்கோலரைப் பூட்டு. இது டொனால்ட் ஜே. ட்ரம்பின் வரலாற்று சாதனை. அமெரிக்கா மீண்டும் முன்னிலை வகிக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

இரண்டாம் இணைப்பு 

கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இருப்பினும், வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கையை புதிதாகப் பதவியேற்ற நியூயார்க் நகர மேயர் மம்தானி கண்டித்துள்ளார். 

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டை ஒருதலைப்பட்சமாகத் தாக்குவது ஒரு போர்ச் செயல் மற்றும் கூட்டாட்சி மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுரோவை நியோர்க்கிற்கு அழைத்து சென்றமை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அங்குள்ள மக்களின் சீரான நிலையை குழப்பும் செயல் எனவும் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முதலாம் இணைப்பு 

ட்ரம்பின் படைகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

குறித்த புகைப்படத்தில், நிக்கோலஸ் மதுரோ, கைவிலங்கிடப்பட்டு கண்கள் கட்டப்பட்டு காவலில் இருப்பது காட்டப்படுகின்றது. 

அமெரிக்காவின் கோர தாக்குதல்! ரஷ்யா - ஈரான் கடும் கண்டனம்

அமெரிக்காவின் கோர தாக்குதல்! ரஷ்யா - ஈரான் கடும் கண்டனம்

நீண்டகால முறுகல்

மேலும், ட்ரம்ப், நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க போர்க்கப்பலான USS இவோ ஜிமாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கைவிலங்குடன் அமெரிக்க தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ | Donald Trump Shared Image Of Nicolas Maduro

இன்றையதினம், வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. 

இதன்போது, அந்நாட்டின் ஜனாதிபதியும் அவரின் மனைவியும் அமெரிக்க படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

பல நாட்களாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே முறுகல் நிலை ஏற்பட்டு வந்த நிலையில் நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் பதவி விலகுமாறு வலியுறுத்தி வந்தது. 

இருப்பினும், அதனை மறுத்து வந்த மதுரோ, எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையிலேயே ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வெனிசுலா தாக்குதல் விவகாரம்! பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் காணொளி

வெனிசுலா தாக்குதல் விவகாரம்! பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் காணொளி

வெனிசுலா ஜனாதிபதி - மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் கைது! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

வெனிசுலா ஜனாதிபதி - மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் கைது! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US