இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா
வடகொரியா இன்று(04.01.2025) குறைந்தது இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே ம்யூங் சீனாவுக்கு அரசுமுறை பயணம் தொடங்கிய நாளிலும், அமெரிக்கா வெனிசுவேலாவில் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகும் இந்த ஏவுதல்கள் நடந்துள்ளன.
இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதிக்குள் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி அச்சுறுத்தல்
இந்த நிலையில், சீனா–தென் கொரியா நெருக்கத்தைத் தடுக்கும் செய்தியாகவும், தாங்கள் வெனிசுவேலாவை விட வலுவான அணு-இராணுவ சக்தி எனக் காட்டும் முயற்சியாகவும், இந்த ஏவுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளன.
அமெரிக்கா, இது உடனடி அச்சுறுத்தல் அல்ல என்றாலும், ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், வரவிருக்கும் கட்சி மாநாட்டுக்கு முன் ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.