மிக மோசமான விளைவு ஏற்படும்.. மீண்டும் ஆத்திரமடைந்த ட்ரம்ப்!
புதிய இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பதவி நீக்கம் செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவை விட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் மதுரோவை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு படை அமைச்சர் அறிவித்துள்ளார்.
வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் அமெரிக்காவிற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆக்கிரமிப்புச் செயல்
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

மேலும், "நாங்கள் மதுரோவையும் முதல் பெண்மணியையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்" என்று கூறியுள்ளார்.
அத்துடன், "இது வெனிசுலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.