இலங்கை பிரபல பாடகி யோஹானிக்கு அறுவை சிகிச்சை! வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு
இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவிற்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சமூக ஊடகங்களில் யோஹானி டி சில்வா தொடர்பில் பல கருத்துக்கள் பரவிவரும் நிலையில், பேஸ்புக் பதிவொன்றினையிட்டு விளக்கமளித்துள்ளார்.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பதிவு
அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"எனக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் வாயில் தையல்கள் போடப்பட்டுள்ளன. நீங்கள் யாரும் பதற வேண்டாம்! என் நலம் குறித்து கேட்டு செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இப்போது மிகவும் நன்றாக உள்ளேன்! என ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்



பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam