மாநாட்டை ஏற்பாடு செய்த பிக்கு இரகசியமாக வெளிநாடு பயணம்! ராஜபக்ச நிக்காயவுக்குள் குழப்பம்
கொழும்பில் வெள்ளிக்கிழமை (20.02.2026) நடத்தப்பட்ட தேரர்கள் மாநாடு பாரிய எதிர்பார்ப்பை சமூகத்தில் ஏற்படுத்தவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மகா பௌத்த சம்மேளனத்தில் நடைபெற்ற மாநாட்டில் குறிப்பிட்ட பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவில்லை.இளம் பௌத்த பிக்குகளை அழைத்து வந்து ஆசனங்களை நிரப்பியுள்ளனர்.
இந்த மாநாடு முற்றிலும் தோல்வியடைந்ததையடுத்து ராஜபக்ச நிக்காயவுக்குள் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாக்கப்பட்ட 8000 பிக்குகள்
அந்தக் கூட்டத்திற்கு 8,000 பிக்குகள் பங்கேற்பார்கள் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியதாவது சுமார் 210 பிக்குகள் மட்டுமே கலந்து கொண்டதாகும்.
இதன் ஏற்பாட்டில் முன்னிலை வகித்த வலவாஹெங்குணவெவ தம்மரத்ன தேரர் யாருக்கும் அறிவிக்காமல் வெளிநாடு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த பல பிக்குகளுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இக்கூட்டம் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பற்றது என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார். நாமல் ராஜபக்சவின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகபட்ச பிக்குகளை கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், காலநிலை காரணமாக தடைகள் ஏற்பட்டதாக தற்போது விளக்கம் அளிக்கப்படுகின்றது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam