இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!
உலகப் பொருளாதாரம் அதிகரித்து வரும் போட்டித்தன்மையுடன், துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்தாவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சாங்கினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சபையின் இலங்கை - அமெரிக்க வணிக கவுன்சிலின் 9ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
கட்டமைப்பு சீர்திருத்தங்கள்
கட்டமைப்பு சீர்திருத்தங்களில் சந்தைப் பன்முகப்படுத்தல், வரி அல்லாத தடைகளைக் குறைத்தல், அரசுக்குச்சொந்தமான நிறுவனங்களில் திறமையின்மையை நீக்குதல் மற்றும் மனித மூலதனம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எதிர்வரும் வரும் தசாப்தத்தில் இலங்கை போட்டியிடவும் செழிக்கவும் இந்த துறைகளில் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியமானதாக இருக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்
இலங்கை வர்த்தக சபையின் இலங்கை - அமெரிக்க வணிக கவுன்சிலின் 9ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam
இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி News Lankasri