பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை வெளியாகியுள்ளன.
தீவிரவாதம், கடத்தல் மற்றும் அரசியல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளது.

இது, அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நைஜரில் கடந்த சில மாதங்களில் பயங்கரவாதம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக போர்கினா ஃபாசோ மற்றும் மாலி எல்லைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன.
பாதுகாப்பு சூழ்நிலை
இதனால், பயணிகள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் குறிவைக்கப்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

கனடா மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்களுக்கு “அதிக அபாயம் உள்ள நாடு” என நைஜரை வகைப்படுத்தி, அவசர தேவையின்றி பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இந்த எச்சரிக்கைகள், நைஜரின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன.
பயணிகள், தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து, அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவுமு் குறிப்பிட்டுள்ளது.