அமெரிக்க வரி குறைப்பிற்கு மகிழ்ச்சி வெளியிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்
அமெரிக்கா இலங்கைக்கான வரித் தொகையை குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை 20 வீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. தனது எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் போட்டியிட
இந்த வரி குறைப்பு இலங்கை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நம்மைச் சூழ்ந்த சுவர்களை இடித்து, உலகத்துடன் பாலங்களை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும்,” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
