இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம்
பாலஸ்தீன மக்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் அவர்களை மரணிக்க செய்யும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள பேரழிவு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட்(Linda Thomas-Greenfield) வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான பாதுகாப்பு அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இஸ்ரேலிய முயற்சி
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பாலஸ்தீனியர்களை பட்டினி கிடக்க வைக்கும் இஸ்ரேலிய முயற்சிகளை அமெரிக்கா நிராகரிக்கிறது.

மேலும், இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை காசா முழுவதிலும், குறிப்பாக வடக்கு பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்.
அத்தோடு உதவிகளை விநியோகிக்கும் ஐ.நா ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam