இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி
இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் (Desirée Cormier Smith) இன்று(11.12.2023) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இன்றைய தினம் வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில், கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)
ஆங்கில அணுகல் உதவித்தொகை
இதன்போது இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பல்வேறு சமூகங்களுடன் வலுப்படுத்தும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், இந்த பயணத்தின்போது அமெரிக்க பிரதிநிதி மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட இன சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்புக்கள் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் தலைமையில் நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில அணுகல் உதவித்தொகைத் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதோடு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வழங்குவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
மலையக தமிழ் சமூகத்தின் இளைஞர்களை மேம்படுத்தும் முயற்சியில், மேற்கொள்ளப்பட்ட மூன்று மாத பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்த 25 மாணவர்களுக்கு சிறப்புப் பிரதிநிதி கோர்மியர் ஸ்மித் விருதுகளை வழங்கவுள்ளதாகவும் கூறப்படகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |