இணையத்தில் பேசுபொருளாகியுள்ள ட்ரம்பின் சிக்னேச்சர் நடனம்
ஐயோவா மாநிலத்தின் கிளைவ் (Clive) நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உரையாற்றியுள்ளார்.
உரையின் இறுதியில், மேடையில் அவர் ஆடிய "சிக்னேச்சர்" நடனம் (Signature dance moves) அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது.
மீண்டும் ஒரு சிறந்த நாடு
மேடையில் பேசிய ட்ரம்ப், "நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக்குவோம்." "அமெரிக்காவை மீண்டும் பெருமைமிக்க நாடாக்குவோம்." "அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக்குவோம்.
President Trump ended his Iowa speech with his dance that saved America.
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) January 28, 2026
It’s iconic from every angle!pic.twitter.com/ppYN5T4DnU
"மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நாடாக (Make America Great Again) மாற்றுவோம்." என்று முழக்கமிட்டுள்ளார்.
அவர் பேசி முடித்ததும், வழக்கம் போல மைதானத்தில் இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப தனது கைகளை அசைத்து அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை (Mid-term elections) முன்னிட்டு, ஐயோவா மாநிலத்தில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பிரசார பயணம் இதுவாகும்.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam