தரையிறங்க அனுமதி கோரிய அமெரிக்க இராணுவ விமானங்கள்! இலங்கை எடுத்த முடிவு - ஜனாதிபதியின் அறிவிப்பு
வேறு எந்த நாட்டிற்கும் அடிபணியாமல், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் திறனை இலங்கை பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகவெரட்டியாவில் இன்றைய தினம் (11.10.2026) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிப்பதும், மத்திய கிழக்கு மோதல்களில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவாகச் செயல்படுவதைத் தவிர்ப்பதுமே 'தேசிய மக்கள் சக்தி' அரசாங்கத்தின் கொள்கை.
பிற நாடுகளுடன் நெருக்கமான உறவு
வர்த்தகம், தொழிநுட்பம் மற்றும் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உலகம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ள நிலையில், பிற நாடுகளுடன் வலுவான மற்றும் நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சூழலில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் வெடித்தபோது, அமெரிக்க இராணுவ விமானங்கள் இலங்கையில் தரையிறங்கவும், ஈரானியப் போர்க்கப்பல்கள் இங்கு நங்கூரமிடவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த கோரிக்கைகள் எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், ஈரானியக் கப்பல் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாராட்டத்தக்க முடிவுகளை எடுப்பதில் இலங்கை வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்