அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: பாகிஸ்தான் முயற்சியால் எட்டப்படுகிறதா முக்கிய உடன்பாடு
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி இன்று(24.4.2026) இரவு ஒரு சிறிய குழுவுடன் நேரில் கராச்சி வருகை தரவுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே மிக முக்கியமான உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருகைக்கு முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் அரகச்சி தொலைபேசி வாயிலாக நடத்திய ஆலோசனைகள், நிலவி வரும் சிக்கல்களுக்கு ஒரு தீர்வை நோக்கிய முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையே இரு நாடுகளுக்கும் இடையிலான முதன்மையான பிரச்சினையாக இருந்து வருகின்றது.
பேச்சுவார்த்தைகள்
இந்த நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
போர் பதற்றம்
தான் ஈரானைப் பணிய வைத்துள்ளதாகவும், ஈரானியத் தலைமைக்குள் ஒற்றுமை இல்லை என்றும் அவர் கூறி வந்தாலும், இந்தக் கூற்றுகளை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இரு நாடுகளும் தங்களது பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்து சற்றே இறங்கி வருவதாகத் தெரியும் நிலையில், ஈரானிய அமைச்சரின் இந்த நேரிடையான வருகை பிராந்தியத்தின் போர் பதற்றத்தைத் தணிப்பதிலும், முடங்கிக் கிடக்கும் வர்த்தகப் பாதைகளைத் திறப்பதிலும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam