ஈரானின் திடீர் தீர்மானம்.. வளைகுடா போர்பதற்றத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள பதிவு!
புதிய இணைப்பு
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை ஈரான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அவர் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிகழ்வுகள் மற்றும் ஈரான் போர் குறித்த சமீபத்திய நிலவரங்கள் பற்றி விவாதிப்பதற்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கும் பயணம் மேற்கொள்ளும் ஒரு பிராந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தானில் நடைபெறக்கூடிய மேலதிக அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
Embarking on timely tour of Islamabad, Muscat, and Moscow.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 24, 2026
Purpose of my visits is to closely coordinate with our partners on bilateral matters and consult on regional developments.
Our neighbors are our priority.
இரண்டாம் இணைப்பு
ஈரானிய வெளியுறவு அமைச்சர் இன்று இஸ்லாமாபாத் செல்கிறார் என ஈரான் அரசு ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
முதலாம் இணைப்பு
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இன்று இரவு ஒரு சிறிய குழுவுடன் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடனான பதற்றத்தைத் தணிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான விரிசலைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
திடீர் தீர்மானம்..
பேச்சுவார்த்தைக்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவினர் ஏற்கனவே இஸ்லாமாபாத் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்திய பின், அமெரிக்கக் குழுவுடனான சந்திப்பு இடம்பெறும் என கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே இல்லை என ஈரான் திட்டவட்டவமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam