மனிதாபிமானத்துடன் பின்வாங்கிய விடயங்களை கோழைத்தனம் என நினைக்காதீர்! நாமலின் அச்சுறுத்தும் பேச்சு
நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கினோம்.
அவை மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டவை கோழைத்தனமாகக் கருத வேண்டாம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..
பின்வாங்கிய சம்பவம்
அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு கை வைக்கவில்லை.
கடந்த நாட்களில் இந்தியாவில் எதிர்கொண்ட விதத்தை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். பங்களாதேஷ் -நேபாளம் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தோம். நாம் அரகலய போராட்டத்தில் ஓரடி பின்வாங்கினோம்.
உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொன்று, அந்தப் உடல்கள் மீது அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையவில்லை செய்யவும் மாட்டோம்.
நாம் மனிதாபிமானத்தோடு பிரச்சினையை எதிர்கொண்டதை கோழைத்தனமாகப் பார்க்க வேண்டாம். கோழைத்தனமாகக் கருத வேண்டாம்.

நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம்.
கோவிட்-19 தொற்றுநோயின் போது, குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் இந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
அரகலய போராட்டத்தின் போது இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் படுகொலை செய்து அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் வாய்ப்பு இருந்தது.
நாம் அப்படிச் செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ச இங்கே நிற்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம்.
மக்களின் பக்கத்தில் நின்று, ஒரு சமூக பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களை மீட்க நாம் ஓரடி பின்வாங்கியதை கோழைத்தனம் என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறிவிட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan