இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!
இலங்கையில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அநுராதபுரம், கொழும்பு மகசின், மொணராகலை, வட்டரக்க மற்றும் வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளில் இருந்த தோட்டாக்களே இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்
மேலும் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் 27 சிறைச்சாலைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பாதுகாப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் 1038 பயன்படுத்த முடியாததோடு, அந்நிறுவனங்களில் அவற்றிற்கு கடும் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
இவற்றில் 62 துப்பாக்கிகள், 50 மேகசின்கள் (Magazines) மற்றும் 1278 தோட்டாக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவை இதுவரை முறையாக பெற்றுக் கொள்ளப்படவில்லை.

இதனால் கலவர சூழ்நிலையின் போது அதிகாரிகளுக்கு அதை எதிர்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைக் கடமைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் போதும் ஆயுதப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்தத் தகவல்கள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..
புல் வெட்ட செல்கிறேன் என பெருமையாக பதிவு: கோடிக்கணக்கிலான கஞ்சாவுடன் சிக்கிய பிரித்தானிய பெண் News Lankasri