அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - அவசரமாக சவூதி புறப்படும் சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவினர் சவூதி அரேபியாவுக்கு அவசரமாக புறப்பட தயாராகியுள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரபெரும, பைஸர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை
இவர்களுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - பலத்த பாதுகாப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்