அனோஜன் விவகாரம்! அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அவசர பணிப்புரை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள்
இதன்போது, சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியான தலையீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - பலத்த பாதுகாப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்