டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புதிய தரவு தெரிவித்துள்ளது.
அதன்படி டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளர்கள் பதிவு
பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு அதி அபாய வலயங்கள்
தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்
விமானப் பயணத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா? திரிஷாவின் வைரல் செல்ஃபிக்கு மருத்துவர் விளக்கம் Manithan