பாகிஸ்தானில் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரான் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து சில சந்தேகங்கள் நிலவிய போதிலும், திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள பகுதியைச் சூழவுள்ள வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் பொலிஸாரால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வரும் சூழலில், இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் ஒரு நிரந்தர உடன்படிக்கையை எட்டுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பதற்றமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது பயணத்தை இரத்து செய்துள்ள நிலையில், இரு நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri