ஆறு நாடுகளின் புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு
இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று(20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திrhநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் விவரங்கள் வருமாறு:-
பப்புவா நியூ கினியா: உயர்ஸ்தானிகர் வின்சென்ட் சுமேல் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
சோமாலியா: தூதுவர் அப்துல்லாஹி முகமது ஒடோவா (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
லக்சம்பர்க்: தூதுவர் கிறிஸ்டியன் பீவர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
வத்திக்கான்: அப்போஸ்தலிக்க தூதுவர் மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக்.
பாகிஸ்தான்: உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர்.
குவைத்: தூதுவர் சலே முபாரக் அல்-சரவி. நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்ததைத் தொடர்ந்து, புதிய இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி சுமுகமான முறையில் கலந்துரையாடினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த
இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.








வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam