48 மணி நேரத்தில் உச்சம் காணும் வெப்பநிலை - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து பல மாகாணங்களில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, இன்று(20.04.2026) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பம் கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த காலப்பகுதியில், பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு, மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam