அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் எதிரொலி! எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 2% வரை வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் ஈரான் போர் தொடங்கிய காலத்திலிருந்து இல்லாத அளவுக்கு, தற்போதுதான் மசகு எண்ணெய் விலை மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இந்த 14 அம்சங்களைக் கொண்ட புதிய உடன்படிக்கையின்படி, ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கியப் பகுதியாக, மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான வழித்தடமாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் கட்டணமின்றி பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த 30 நாட்களுக்குள் இந்த வழித்தடத்தில் கடல்சார் போக்குவரத்து அதன் முழுத் திறனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பேரலுக்கு 1.59 டொலர்கள் குறைந்து 77.96 டொலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலை 1.83 டொலர்கள் குறைந்து 74.96 டொலராகவும் சரிவடைந்துள்ளது.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள போதிலும், ஈரானின் அணுசக்தி திட்டம் போன்ற சில சிக்கலான விவகாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
டொலர் நிதியுதவி
மேலும், ஈரானின் மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இணைந்து 300 பில்லியன் டொலர் நிதியுதவி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் கோருகிறது.

ஹோர்முஸ் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுவதால் ஜூலை மாத இறுதிக்குள் வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி கணித்துள்ளது.
எனினும், பல்வேறு நாடுகள் தங்களின் இருப்புக்களை நிரப்ப முயல்வதாலும், அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தாலும், எண்ணெய் விலைகள் மேலும் கிடுகிடுவென குறையாமல் ஓரளவுக்கு கட்டுக்குள்ளேயே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.