அமெரிக்காவில் சீன இரகசிய பொலிஸ் நிலையம் நடத்திய அமெரிக்க குடிமகன்.. நீதிமன்றின் உத்தரவு
நியூயோர்க் நகரின் சைனாடவுன் பகுதியில் சீன அரசாங்கத்திற்காக இரகசிய பொலிஸ் நிலையம் ஒன்றை நடத்தி வந்த லூ ஜியான்வாங் என்ற 64 வயது அமெரிக்க குடிமகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீன பொது பாதுகாப்பு அமைச்சுக்காக இந்த நிலையத்தை அமைத்து இயக்கியமை மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை அழித்து நீதியைத் தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இந்த இரகசிய நிலையமானது, சீனாவுக்கு எதிராகச் செயல்படும் அதிருப்தியாளர்களைக் கண்காணிக்கவும் அச்சுறுத்தவும் பயன்படுத்தப்பட்டதாக எஃப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றங்களுக்காக லூ ஜியான்வாங்கிற்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவருடன் இணைந்து செயல்பட்ட சென் ஜின்பிங் என்பவர் ஏற்கனவே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றார்.

எவ்வாறாயினும் சீன அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இவை பொலிஸ் நிலையங்கள் அல்ல என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை வழங்கும் மையங்கள் மட்டுமே என்றும் சீனா கூறுகின்றது.
எனினும், உலகம் முழுவதும் 53 நாடுகளில் இது போன்ற 100க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயல்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இதே வாரத்தில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்! இலங்கைக்கு பேரிடியாகும் நிலைமை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri