லசந்த படுகொலைக்கு 17 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - சகோதரர் லால் கடும் அதிருப்தி
'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
'லசந்தவுக்காக நாம்' அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
சாட்சிகளை மாற்றியமைத்த பொலிஸ்மா அதிபர்
மேலும் கூறுகையில், "அன்று மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவைச் சுட்டது யார் என்பது எமக்கும் தெரியும், பொலிஸாருக்கும் தெரியும். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

பொலிஸார் நினைத்தால் நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாளில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இதில் ஏன் மௌனம்?
லசந்தவின் நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சாட்சிகளை மாற்றியமைத்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்கள் ஆக முடியாது. அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக இராணுவத்தின் ஒரு சிறு குழு செய்த தவறுகளை மறைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். இதனைத் திருத்தாமல் நாடு முன்னேறாது" என்றும் குறிப்பிட்டு்ளளார்.
கொலையுடன் தொடர்புடையவர்கள்
லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் என்றும், சாட்சிகள் இருந்தும் ஏன் எவரும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

லசந்த சர்வதேச அளவில் வீரராகப் போற்றப்படும் நிலையில், சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டதும் பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டதும் வெட்கப்பட வேண்டிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தபோது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும், அந்த நம்பிக்கையில் தான் காத்திருப்பதாகவும் லால் விக்கிரமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri