இலங்கையில் தீவிரமடையும் நிலைமை! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நதிப்பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
வான்பாயும் நீர்த்தேக்கங்கள்
இதேவேளை இன்று (15) காலை 6 மணி நிலவரப்படி 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிட்டார்.

- அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.
- ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம்.
- குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம்.
- கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள். மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள்.
- புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள்.
- மன்னார் மாவட்டம்: யோத வாவி.
You May Like This Video..
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri