இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்! மதுர விதானகே எச்சரிக்கை
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் தமது மனதில் பதித்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும் எனவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி மதுர விதானகே சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை மக்களோ, எதிர்க்கட்சிகளோ, குறைந்தபட்சம் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் அல்லது சட்டத்தரணிகள்கூடக் கோரவில்லை. அவ்வாறு எவராலும் கோரப்படாத ஒரு திருத்தத்தையே அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்
திசைகாட்டியின் கொள்கைப் பிரகடனத்தில்கூடக் குறிப்பிடப்படாத விடயங்கள் இந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னர் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் மக்கள் வாக்களித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிராகச் செயற்படுவதற்காக அல்ல.
ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சிய தக்கவைத்துக்கொள்ள முயன்றது போன்றோ அல்லது பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி அதிகாரம் போன்றோ இலங்கையில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அதற்கான எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

ஆளும் தரப்பில் சில பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் இறுதியில் அனைவரும் வாக்களித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மனசாட்சிக்கு எதிரான செயற்பாடு
ஜனநாயகத்துக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்காகவும் குரல் கொடுத்ததாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்களும் இந்த விடயத்தில் தமது மனச்சாட்சிக்கு எதிராகச் செயற்பட்டுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் பிரபாகரன் உள்ளிட்டவர்களும், 1505ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் என பலரும் இந்த நாட்டை அழிக்க முயன்றனர்.
எனினும், இந்த பௌத்த நாட்டுக்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது. அதற்கு இந்த நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். பௌத்த நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எதேச்சதிகார அரசுக்கும் அதன் விளைவுகள் நிச்சயம் கிடைக்கும். இத்தகைய எந்தவொரு ஆட்சியாளரும் தொடர்ந்தும் யதார்த்தமான முறையில் ஆட்சி நடத்தியதில்லை என்பதால், இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஆட்சியாளர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam