நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிரான வழக்கு : பொலிஸாருக்கு மேலும் ஒரு மாத அவகாசம்
கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் டித்வா புயல் வீசிய சமயம் கிளிநொச்சியில் புயல் நிவாரணப் பணிகளின் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தாக்கினார் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள வழக்கில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கிளிநொச்சி நீதிவான கிருஷாந்தன் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.
கடமையிலிருந்த கிராம சேவையாளரைத் தாக்கியமை தொடர்பான விவகாரம் கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு, மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
மன்றில் முன்னிலையான பொலிஸார்
எனினும், பின்னர் அவர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிரான வழக்கு கடந்த ஜனவரி 20ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு விசாரணைகளை முடித்து, குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாயின் அதற்காக சுமார் 8 மாத காலம் கால அவகாசம் வழங்கி வழக்கை நேற்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
வழக்கு நேற்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையான பொலிஸார் வழக்குத் தொடர்பான நிலைப்பாடு எதையும் தெரிவிக்காமல் இருந்த சூழ்நிலையில், விவகாரத்தை ஒட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை மன்றுக்கு வருமாறு அழைத்து, வழக்கை நேற்று நண்பகல் 1:30 வரை நீதிவான் ஒத்திவைத்தார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு
மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த விடயத்தில் மேலதிக விசாரணைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு பொலிஸ் தரப்பில் கோரப்பட்டது.

விசாரணையை முடித்து இந்த விடயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாயின், அதனை அடுத்த தவணைக்குள் செய்யுமாறு வெளிப்படுத்திய நீதிவான் வழக்கை ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் சார்பில் நேற்றைய வழக்கின் காலை மற்றும் மதிய அமர்வுகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி சமர்ப்பணங்களைச் செய்திருந்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் மன்றில் முன்னிலையானார்.
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri