கிரிஷ் மற்றும் எயார்பஸ் ஒப்பந்தங்கள் தொடர்பான இரு வேறு வழக்குகள்! நாமலுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் ஒக்டோபர் 6 ஆம் திகதிவரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்றுமுன் கொழும்பு பிரதான நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் ஆகிய இரு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (29.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கிரிஷ் மற்றும் எயார்பஸ் ஒப்பந்தங்கள் தொடர்பான இரு வேறு வழக்குகள் நிமித்தம் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
வழக்கு விசாரணை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தை, 'கிரிஷ் டிரான்ஸ்வேர்க் கொழும்பு' தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டிருந்தார்.
கிரிஷ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த இடையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவு
இதேவேளை எயார்பஸ் வானூர்தி கொள்முதல் ஊழல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல், இன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
எனவே, அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதைக் கருத்திற் கொண்டு, கிரிஷ் ஒப்பந்த வழக்கையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this video
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan