குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்! ஈரான் குற்றச்சாட்டு
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் அபாச்சி உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்துள்ளது.
தற்காப்பு நடவடிக்கையாகவே தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்ட போதிலும், ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள சிமிரிக் மாவட்டத்தின் முக்கியமான குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் கோஹெஸ்டக் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை
தாக்குதல்
ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான வறட்சியையும், நிலத்தடி நீர் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு, இந்த நீர்நிலைத் தேக்ககங்கள் மீதான தாக்குதல் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலால் சுமார் 7.8 இலட்சம் முதல் 8.3 இலட்சம் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மனிதநேயச் சட்டங்களின்படி, போர்க்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை இலக்கு வைப்பது போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan